மட்டு ஊடகவியலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட்டதை பொறுத்துக் கொள்ளமுடியாத பிள்ளையான் – ஈரோஸ் பிரபா தெரிவிப்பு

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட 10 பேர்ச் காணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல்படுகின்றார் பிள்ளையான் என, ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் (ஈரோஸ் பிரபா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஈரோஸ் பிரபா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு ஈரோஸ் பிரபா ஊடகவியலாளர் மத்தியில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

தங்கள் உயிரை பணையம் வைத்து ஜனநாயகப் பண்புகளை மதித்து நடக்கும் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் பல பெரிய சலுகைகள் வழங்கப்பட்டதன் பிற்பாடும் , மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மயிலம்பாவலியில் ஒரு பத்துப் போர்ச் காணிதான். இதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிள்ளையான் வயிற்றெரிச்சல் படுகின்றார் என தெரிவித்துள்ள பிரபாவின் ஊடகவியலாளர் சந்திப்பின் முழுமையான காணொளியை பார்வையிடவும்.