
மட்டக்களப்பு லியோ கழகத்தின் 42ஆவது புதிய நிர்வாக பதவியேற்கும் நிகழ்வு
மட்டக்களப்பு லியோ கழகத்தின் 2024/2025 ஆண்டுக்கான 42ஆவது புதிய நிர்வாக தெரிவுக்கான நிகழ்வு லியோ கழகத்தின் தலைவர் ஹரிசாந்த் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதியில் இடம் பெற்றது.
2024/2025 ஆண்டுக்கான புதிய தலைவராக லியோ இந்திரராஜன் விதுபிரகாஷ்தெரிவு செய்யப்பட்டதுடன் 15 லியோ கழக செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாக பதவியேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் விஜயகுமார் புதிய நிர்வாகத்தின் கழக ஆலோசகர் லயன்.லோகேந்திரன் மற்றும் லயன்ஸ் தலைவர்கள்,லயன்ஸ் கழக உறுப்பினர்கள், லியோ கழக தலைவர்கள், லியோ உறுப்பினர்கள், முன்னால் லியோ தலைவர்கள், புதிய லியோ அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றுதலுடன் இப்புதிய நிர்வாக பதவியேற்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
