
மட்டக்களப்பு-காத்தான்குடியில் கைக்குண்டுடன் இருவர் கைது
மட்டக்களப்பு-காத்தான்குடியில் கைக்குண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது காங்கயன்ஓடை அல்-அக்ஸா மைதானத்தில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலமுனை-10 பகுதியை சேர்ந்த, மொஹமட் ஜிப்ரி (வயது 29), மொஹமட் றிஸ்கான் (வயது 28) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் காத்தான்குடி பகுதியில் பல காலமாக வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
