சோற்று பொதியில் மட்டைத்தேள்: உணவகத்திற்கு சீல்
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சோற்றுப்பொதியில் மட்டைத்தேள் கிடந்ததாக முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றையதினம் திங்கட்கிழமை கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000 ரூபா தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்