பானுக ராஜபக்ச அணியில் இருந்து விலகல்

எதிர்வரும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ச அணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த போட்டி சுற்றுப்பயணத்தில் இருந்து மாத்திரம் தன்னை விடுவிக்குமாறு பானுக ராஜபக்ச இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.