பொலிவிய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து
பொலிவிய விமானப்படையின் C-130H (Hercules) ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் (La Paz )லா பாஸில் உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது 15 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் எல் ஆல்டோ பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக சர்வதெச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
