வீட்டிற்குள் இருந்து வீசிய துர்நாற்றம் : பதுளையில் இடம்பெற்ற துயரசம்பவம்

-பதுளை நிருபர்-

பதுளை அளுத்வெலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று புதன்கிழமை காலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை அளுத்வெலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் சில நாட்களாக வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கிராம உத்தியோகத்தருக்கு தகவல் அளித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் பதுளை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பதுளை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வீட்டை திறந்து பார்த்த போது நபர் ஒருவர் வீட்டினுள் உள்ள கட்டிலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

இறந்ததமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.