
கல்வி அமைச்சின் மாணவர்களின் உள விழிப்பு சபையின் உறுப்பினராக பாபு சர்மா நியமனம்
உளவிழிப்பு அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சு ஆகியவை பாடசாலை மாணவர்களுக்கு உளவிழிப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகளை செய்துள்ளன.
இது தொடர்பில் கல்விய அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் ஆலோசனையின் பேரில் சர்வமத குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் உறுப்பினராக கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாபுசர்மா முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன காலத்திலும், தற்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த காலத்திலும் இந்து சமய பாடநெறியின் ஆலோசகராக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.