
கொழும்பு செந்தில்குமரன் அறநெறி பாடசாலையில் கலை விழா
கொழும்பு தெமட்டகொடையில் செந்தில்குமரன் அறநெறி பாடசாலையில் கலை விழா நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதியின் இந்து அலுவலக இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் எஸ் தனபாலா, எழுத்தாளர் பவானி, அறநெறி பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி ஜோதி கனகலிங்கம் மற்றும் நடன பொறுப்பாசிரியை கண்ணகி சண்முக ரத்ன சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.



