பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்-

இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் இலங்கை சிவசேனை தலைவர் மூதறிஞர் மறவன் புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றது.

காசாவுக்கு ஒரு நீதியா?இந்துக்களுக்கு இன்னொரு நீதியா?நிறைவேற்று நிறைவேற்று பசுவதைதடைச் சட்டத்தினை நிறைவேற்று, இலங்கை சிவபூமி முகமதியரே புனித சின்னத்தினை சிதைக்காதீர், பொஸிசாரே, பொஸிசாரே பசுத்திருடர்களை கைது செய், பசுக்கள் மீதும் இறை தூதர்களும், கைவைத்தால் அழிவாய், அறுக்காதே அறுக்காதே கோமாதாவினை அறுக்காதே, கோமாதாவினை வெட்டி இந்து சமயத்தவர்களின் மனதில் ஈட்டிபாய்ச்சாதே? என்ற பாததைகள் ஏந்திய வண்ணம் கோசங்கள் இட்டு தமது எதிர்ப்பு போட்டத்தினை முன்னெடுத்தனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமது ஆதரவினை வழங்க சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப் பளை துர்க்கா தேவஸ்தான தலைவரும் ஆகிய கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பசுக்கொலைக்கு ஏதிராக தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்