
வாழைச்சேனை – அக்கரைப்பற்று பேருந்து மீது தாக்குதல்
-கிரான் நிருபர்-
வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக வாழைச்சேனை-அக்கரைப்பற்று வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பஸ்வண்டியின் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கி இன்று திங்கட்கிழமை அதிகாலை சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மீது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் 18ம் கட்டைப்பகுதியில் அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன்இ நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலால் பஸ் பிரயாணிகள் பெரிதும் அசெளகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.


