அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: 6 பேர் கைது

அத்துருகிரியவில் உள்ள வணிகக் கட்டடத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் வணிகக் கட்டடத்தின் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குழுவுடன் வணிகக் கட்டிடத்தின் உரிமையாளருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்