ஆசிய கிண்ணம் : இன்று இலங்கை – பங்களாதேஷ் மோதல்

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

பகல் இரவு ஆட்டமாக இடம்பெறும் இந்த போட்டி கொழும்பில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

17 பேர் கொண்ட இந்திய குழாமில் சஞ்சு சாம்சன் மேலதிக வீரராக பெயரிடப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இணைந்துள்ளமையை அடுத்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளதாக இந்திய  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்