சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கஞ்சா ஏற்றி வருவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் தீவிர சோதனையின் பின், சூட்சுமமான முறையில் கப்ரக வாகனத்தில் ஒழித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முறபடுத்தவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.