Last updated on April 28th, 2023 at 03:28 pm

மத்திய கிழக்கு மனித கடத்தல் : விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது

மத்திய கிழக்கு மனித கடத்தல் : விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் 6 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த இவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி இளைஞர்களை விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க