மனைவி மீது கோபம் ; மூன்று உயிரை பலியாக்க துணிந்த கணவன்

தந்தையொருவர் தனது 2 பிள்ளைகளுக்கு  நஞ்சு கலந்த உணவை உண்ண கொடுத்து அதை தானும் உட்கொண்ட நிலையில் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் நுவரெலியா பூண்டுலோயா ஹெரோஹ்ட் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது.

மனைவி தங்களை விட்டு கொழும்புக்கு வேலைக்கு போனதால் விரக்தியடைந்த குறித்த நபர் கோபப்பட்டு இவ்வாறு நஞ்சு கலந்த உணவை பிள்ளைகளுக்கும் கொடுத்து தானும் உண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.