சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் புலி நுளம்புகளின் பரவல் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் புலி நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதாக, வலாய்ஸ் மாநிலம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 இல் முதன் முதலில் வலே மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட புலி நுளம்புகள் 2023 இல் கணிசமாக அதிகரித்ததுள்ளதாகவும், இந்த நுளம்புகள் மொன்தே, கொலம்பே-முராஸ் மற்றும் ஃபுல்லியில் கண்டறியப்பட்டது.

புலி நுளம்புகள் 2023 இல் மிதமான வானிலையால் பயனடைந்ததுள்ளதாகவும் இது அதன் இனப்பெருக்கத்தை எளிதாக்கியது என்று வலாய்ஸ் மாநிலம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

இனப்பெருக்கம் செய்யும் இடமாக செயல்படும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் தாவர சட்டிகள் போன்ற நீர் சேகரிக்கும் கொள்கலன்களை அகற்றுவதன் மூலம் கட்டுப்பாட்டு முயற்சிகளில் பங்கேற்க குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து முழுவதும், புலி நுளம்புகளினால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

இது டெங்கு காய்ச்சல், ஜிகா வைரஸ், சிக்குன்குனியா வைரஸ் போன்ற நோய்களை பரப்பும் என்றும் , இன்று வரை சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்று எதுவும் பதிவாகவில்லை எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலி நுளம்புகள் முதன்முதலில் 2003 இல் சுவிட்சர்லாந்தில் டிசினோவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2015 இது வாசல், கிராபண்டன், சூரிச், வாட், ஜெனிவா மற்றும் வலாய்ஸ் ஆகிய இடங்களில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்