முறையான புலம்பெயர்தல் மற்றும் தொற்று நோய் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட புலம்பெயர்தளுக்கான சங்கங்களுக்கு இடையிலான முறையான புலம்பெயர்தல் மற்றும் சுகாதார ரீதியான தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம் பெற்றது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வை புலம் பெயர்தளுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு இணைந்து இன்று வியாழக்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பான புலம்பெயர்வு ஊடாக புலம் பெயர்தல் முறையான புலம்பெயர்வு மற்றும் சட்ட ரீதியான புலம் பெயர்வே சிறந்தது தொடர்பிலும் இதன் போது தெளிவூட்டப்பட்டன. குறித்த புலம் பெயர்வு மூலமாக தகாத உறவுகளை தவிர்த்தும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
“பாதுகாப்பானதும் ஒழுங்கு முறையானதுமான புலம்பெயர்வினூடாக வளமான எதிர்காலம்” என்ற எண்ணக் கருவுக்கு அமைய இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வளர்முக நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று தொழில்களை மேற்கொள்ள முயற்சிப்பதும் கடல் வழி மூலமாக சர்வதேச நாடுகளுக்கு சட்ட விரோதமான புலம்பெயர்வுகளை ஏற்படுத்திக் கொள்வதும் பல பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
புலம் பெயர்வின் போது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலமாக சட்ட ரீதியாக பதிவு செய்து பாதுகாப்பாக இடம் பெயர்வதும் நல்ல விடயமாக இங்கு தெளிவூட்டப்பட்டது.
எச் ஐ வி தொற்று நோய் மற்றும் நோய் பரவல் புலம் பெயர்வின் போது ஏற்படுகிறது இதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் வி.ஸ்ரீகௌரிஸ்வரன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஜெகன் ஆகியோர்கள் வளவாளர்களாக இணைந்து இதனை தெளிவுபடுத்தினர்.
முறையான புலம் பெயர்வு தொடர்பில் வளவாளராக IOM இன் திட்ட இணைப்பாளர் (மட்டக்களப்பு) திருமதி மயூரன் மேரி லெம்பேர்ட் கலந்து கொண்டு தெளிவூட்டினார்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாவட்ட இணைப்பாளர், புலம் பெயர்வாளர்கள் ,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்