
கடலில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி
-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவின் மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளான்.
மூதூர் -அக்கரைச்சேனை சேர்ந்த சேர்ந்த இர்பான் இபாம் வயது (வயது – 8) என்கிற சிறுவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
வீதியோரத்திலுள்ள குறித்த களப்புக் கடலில் மூன்று சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைடுத்து குறித்த களப்பு கடல் வீதியால் சென்றவர்கள் மூன்று சிறுவர்களையும் காப்பாற்ற முயற்சித்தபோதும் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததோடு, உயிரிழந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்த சிறுவனின் சடலம் சிறிது நேரத்தின் பின்னர் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிரலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்