
278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பு பெறும் கைதிகளில் 10 பெண் கைதிகள் உட்பட வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைக் கைதிகளைச் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கைதிகளை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
