ஆந்த்ரோபிக்(Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க், ஆபத்தான நிலையை அடையும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை உடனடியாக நிறுத்தக்கூடிய ‘Kill Switch’ வசதி, எதிர்காலத்தில் AI நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
AI மிகவும் சக்திவாய்ந்ததாக மாறி வரும் நிலையில், நிறுவனங்கள் வைத்திருக்கும் இந்த அவசர நிறுத்து வசதி மூன்றாம் தரப்பினரால் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான முன்னணி AI நிறுவனங்களிடம் ஏற்கனவே தங்கள் அமைப்புகளை அவசரமாக நிறுத்துவதற்கான வழிமுறைகள் இருப்பதாகவும் கிளார்க் தெரிவித்துள்ளார்.
AI வளர்ச்சியை முழுமையாகக் கட்டுப்பாடின்றி விடுவது ஆபத்தானது என எச்சரித்த அவர், AI தொடர்பான மிகப்பெரிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார். அமெரிக்காவில் AI அமைப்புகளை நிறுத்தும் அதிகாரம் தொடர்பான ‘கில் ஸ்விட்ச் சட்டம்(Kill Switch Act)’ முன்மொழியப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன் அரசு கட்டாய AI ‘கில் ஸ்விட்ச்(Kill Switch)’ யோசனையை இதுவரை நிராகரித்துள்ளது.









