ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த காரும், யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் மற்றும் கூலர் வாகனம் ஆகியவை, ஒன்றோடு ஒன்று மோதி வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, திருகோணமலை அலஸ்தோட்டத்தை பிறப்பிடமாகவும், யாழ் கொடிகாமத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் 5 பிள்ளைகளின் தந்தையான குணரெட்னம் ரோபின்சன் (வயது 36) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.