மட்டக்களப்பில் விபத்து: கணவன் மனைவி படுகாயம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புனாணை பகுதியில் இன்று திங்கட் கிழமை காலை 5 மணியளவில் இடம்பெற்ற  கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவரும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் காரில் கொழும்புக்கு சென்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதன்போது கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.

காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்