Sri Lanka Tamil News Site

மின்கசிவு காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்

- Advertisement -

-யாழ் நிருபர்-

யாழ்-ஊரெழு பகுதியில் நேற்று புதன்கிழமை மதியம் வீடு ஒன்று மின்சார கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

- Advertisement -

வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் உடைகள், உடைமைகள், புத்தகங்கள், பாத்திரங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

வீடு தீப்பற்றி எரிந்ததையடுத்து அயலில் உள்ளவர்கள் சுமார் மூன்று மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன்,  இச்சம்பவம் குறித்து மின்சார சபையினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -