கருக்கலைப்புக்கு அனுமதி

10

ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது.

இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

இந்த முடிவு பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமானது ஒரு பெண்ணுடன் அவளது விருப்பத்திற்கு மாறாக, அவளது சம்மதமின்றி அல்லது போதுமான விருப்பமின்றி உடலுறவின் விளைவாக இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.

அதேபோல் கர்ப்பத்திற்கு காரணமானவர் அந்த பெண்ணின் திருமணத்திற்கு தகுதியற்ற உறவினர்களில் ஒருவராக இருந்தாலும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருக்கலைப்பு பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் ஏனென்றால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக அரசாணை வெளியிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath