யானை தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

கிண்ணியா இடிமனை பகுதியை  சேர்ந்த இளம் குடும்பஸ்தரான அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் (வயது -26) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர் இழந்த நபர் தந்தையுடைய  பண்ணைக்கு சென்ற வேளையில் அங்கு மறைந்திருந்த யானை தாக்கியே அவர் உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்