
ரயிலில் மோதி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிiந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தாயாரான திருகோணமலை பூம்புகார் வீதியில் வசித்து வரும் மேரி சாந்தி (47வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
