குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

பசறையில் நேற்று திங்கட்கிழமை குளவிகொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

மில்லபெத்த பிட்டகொலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிட்டகொலகம பகுதியில் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த போது மிளகு கொடிக்குள் இருந்த குளவி கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்த நபரின் சடலம் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எம்.பியரட்ண தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்