
முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து
-பதுளை நிருபர்-
பசறை மடுகஸ்தலாவ வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பசறை மடுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தாயும் அவரது 6மாத குழந்தையும் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 6மாத குழந்தை பயணித்துள்ளதுடன், மழை காரணமாக மடுகஸ்தலாவ பகுதியில் வீதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மடுல்சிம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
