
வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேணை டில்லுகுற்றி தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது நேற்று செவ்வாய் கிழமை பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீட்டின் கூரைப்பகுதி மற்றும் வீட்டின் ஒரு பகுதி சுவரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் மின் இணைப்பு வயர்கள் மீது மரக்கிளை வீழ்ந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மற்றும் பிள்ளைகளின் பாட்டி என நால்வர் பாதுகாப்பாக உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது மரக்கிளையை அகற்றும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
