இருவருக்கு இடையில் கைகலப்பு: வீடு முற்றாக தீக்கிரை
-பதுளை நிருபர்-
பசறை டெமேரியா பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடொன்று தீவைத்து முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
டெமேரியா ஏ தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடையவர்களே இதன்போது காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு சனிக்கிழமை 10.30 மணியளவில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் குறித்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
