ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை
-யாழ் நிருபர்-
கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் இரண்டு மாணவர்களின் மாதிரி சந்தை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது..
கொக்குவில் இருந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் கவிஞ்ஞா நவஜீவாவவின் நெறிப்படுத்தலில் தரம் 2 வகுப்பு பொறுப்பாசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாதிரி சந்தை நிகழ்வு இன்றைய தினம் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.
குறித்த மாதிரி சந்தை வளாகத்தினை செல்வதயாளன் ஆசிரிய ஆலோசகர் யாழ். வலய கல்வி வலய கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்ததோடு மாணவர்களின் சந்தை விற்பனை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
