கொழும்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்

கல்கிஸ்சை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் மீனினம் எனவும் அவை உணவுக்காக எடுத்துக் கொள்ளப்படாத மீன் வகை எனவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலும் ஆழ்கடலில் வாழும் இந்த அரியவகை மீன்களின் நிறம் ஏனைய மீன்களின் நிறத்தில் இருந்து வேறுபட்டதாகவும் தோலில் புள்ளிகள் காணப்படும் எனவும் இவை பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்வதாக கூறப்படுகின்றது.

குறித்த மீன் ஆழ்கடலில் உள்ள பாறைகளைச் சுற்றி கடற்றொழிலாளர்கள் வீசிய வலைகளில் சிக்கியிருக்கலாம் அல்லது போர்க்கப்பல்களிருந்து வெளியேறும் திரவம் மூலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்