பொலிஸ் ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து
-பதுளை நிருபர்-
பசறை மடோல்சிம வீதியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் பொலிஸ் ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பிடமாறுவ மடோல்சிம பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
மடோல்சிம பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான ஜீப் வண்டி பசறை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் மடுல்சீமை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மெதவலகம பக்கம் இருந்து வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பசறையில் இருந்து மடுல்சீமை நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டியும் பசறை மடுல்சீமை 4ஆம் கட்டை சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது
முச்சக்கர வண்டியின் சாரதியின் கவணயீனமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்
முச்சக்கரவண்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் இருந்ததாகவும், விபத்தினால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவத்தில் பொலிஸ் ஜீப் மற்றும் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்