
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.40 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் பேருந்து உரிமையாளரின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
பேருந்து தீக்கிரையானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
