
தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடலில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு கடல் பரப்பில் குறித்த நண்டினமானது மீனவர்களின் வலைகளை சேதப்படுத்துவதாகவும் வலைகளில் படும் மீன்களையும் சாப்பிடுவதாகவும் இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரமும் தங்களது வலைகளும் சேதப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் தொடர் மழை இவைகளுக்கு அப்பால் மீனவர்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு செல்லும் நிலையே உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
குறித்த நண்டினம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கடற்தொழில் அமைச்சரோ அரசாங்க கடற்தொழில் கூட்டத்தாபணமோ எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை எனவும் மீனவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
இதன் காரணமாக தற்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் மீனவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு செல்வதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் கேட்டுள்ளனர்
