நீர்கொழும்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பமுனுகம – சூரியமல்வத்த பிரதேசத்தில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இந்த சடலமானது மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாததுடன் இவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரது சடலம் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்