
மனைவியை கொன்று விட்டு உடலுறவிற்காக பொம்மை வாங்கிய நபர்
அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை கொன்று விட்டு காப்புறுதி தொகையை பெற்று செலவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி ட்ரிக்கிள் (வயது – 30) என்பவர் அவரது மனைவி கிறிஸ்டன் டிரிக்கிள் (வயது – 26) என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு மனைவி தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிசாரும் இது தற்கொலை என வழக்கை நிறைவு செய்துள்ளனர்.
மனைவி இறந்த பின்னர் அவரின் பெயரில் 2 ஆயுள் காப்பீடுகள் இருந்தது. அதன் மூலம் கோல்பிக்கு 1.20 லட்சம் டொலர் காப்புறுதி தொகை கிடைத்தது.
அந்த பணத்தை பயன்படுத்தி வீடியோ கேம்கள் வாங்கியுள்ளார். கடன்களை அடைத்துள்ளார், தான் பெரிய இசை கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் இசைக்கருவிகள் வாங்கி குவித்தார். இதோடு மட்டும் நின்று விடாமல் 5.91 இலட்சம் ரூபா மதிப்பிலான உடல் உறவு பொம்மை ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவரது தாயார் கூறும் போது தனது மகன், மனைவி இறந்த பின்பு சரியாக தூங்குவது இல்லை, இதனால் உடலுறவு பொம்மையினை வாங்கினார் ஆனால் அதனுடன் உடல் உறவு எதுவும் வைக்கவில்லை என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.
மனைவியை கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடி காப்புறுதி மூலம் கிடைத்த பணத்தில் உடலுறவு பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்கில் பொலிசார் கோல்பி டிரிக்கிளை கைது செய்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
