பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்த சிகரெட்டுகளை டுபாயிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்