
காதலியை திருமணம் செய்து தராததால் வீட்டை கொழுத்திய காதலன்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெற்றோல் ஊற்றி ஏரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டில் உள்ள உடமைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
குறித்ததாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெற்றோல் குண்டு தாக்கு நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று சனிக்கிழமை அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


