
மனிதக் கடத்தல் : விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு உள்ளடங்களான குழு ஓமன் சென்றுள்ளது
மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்தக் குழுவில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒரு பெண் துணைப் பரிசோதகர் ஆகியோர் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டு வேலையாட்களாக ஓமானுக்கு அனுப்பியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, இந்த மனித கடத்தல் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவின் கீழ் ஓமன் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.
மனித கடத்தல் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் குற்றப்புலனாவுய்ப்பிரிவினரால் கைது செய்ததுள்ளமை