
கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் தெரிவித்தார்.
மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது.
இதனால் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல், 5 மாதங்களுக்கு அந்தப் பாதை ஊடாக ரயில் சேவை நடத்தப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ரயில் சேவையை நடத்த முடியாது என்றால் அந்த ரயில் சேவையை மன்னாருக்கு நடத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிய நிலையில், அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
