
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல்
டுபாய் மற்றும் அபுதாபி உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு பயிற்சியற்ற வேலைகளுக்கு பெண்களை சுற்றுலா விசாவில் அனுப்புவதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்றவர்களில் சிலர், தொழிலின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.