
85 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
-கல்முனை நிருபர்-
பொருளாதார நெருக்கடி காரணமாக தீபாவளியை கொண்டாட முடியாது தவித்த தெரிவு செய்யப்பட்ட 85 குடும்பங்களுக்கு மோட்டிவேசன் அண்ணாச்சி சமுக நல அமைப்பின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சமுக சேவகி சாராவின் நிதி அனுசரணையில் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்ட்டன.
மட்டக்களப்பு ஒரு முழச்சோலை, துறைநீலாவணை, அம்பாறை திருக்கோவில் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மோட்டிவேசன் அண்ணாச்சி சூசைதாஸ் தலைமையில் இவ் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
