மின்னொளி கரப்பந்தாட்ட சமரில் மட்டு எவர் சைன் விளையாட்டுக்கழகம் சம்பியன்

-கல்முனை நிருபர்-

மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டுக் கழகத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக மின்னொளி கரப்பந்தாட்டம் 2022 மட்டு எவர் சைன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 15 அணிகள் பங்கபற்றியிருந்தன. இறுதிப்போட்டிக்கு எவர் சைன் விளையாட்டுக் கழகமும், குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டுக் கழகமும் களம் இறங்கி பலப்பரிட்சை நடத்தின. இதில் எவர் சைன் விளையாட்டுக் கழகமும் முதலாம் இடத்தை பெற்று சம்பியனாகியது. இரண்டாம் இடத்தை குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் ஆட்ட நாயகனுக்கான விருது குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டுக் கழகத்தின் லக்சான் பெற்றுக்கொண்டார். அத்துடன் போட்டியில் பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன.