இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்த இந்திய பிரஜை கைது

89,000 ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று சனிக்கிழமை காலை துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான யு-எல் 226 இல் விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது சூட்கேஸில் 5 தங்க பிஸ்கட்கள் மற்றும் இடுப்பு பெல்ட்டின் தங்க கொக்கிகளை கவனமாக மறைத்து வைத்திருந்ததாகவும், இதனால் சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டதாகவும் விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.