
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள எஸ்.ரி.எஸ் வைத்தியசாலை நிறுவனத்தினர், யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
நல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 81 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
ஒவ்வொன்றும் சுமார் 2000 ரூபாய் பெறுமதியான ஒரு லட்சத்து 60,000 ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நல்லூர் பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக இப்பாடசாலை தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இதில் எஸ்.ரி.எஸ் வைத்தியசாலை நிறுவன பணிப்பாளர், ஊழியர்கள் மற்றும் நல்லூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


