மட்டு.விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை வெகு  விமரிசையாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நாடகம் மற்றும் நடனங்கள் இடம்பெற்றிருந்தது.

அத்தோடு, நிகழ்வில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு சின்னம் வழங்கி பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.