
இலங்கை வங்கியின் புதிய கிளை திறந்து வைப்பு
-யாழ் நிருபர்-
இலங்கை வங்கியின் புதிய கிளையானது இன்று செவ்வாய்கிழமை சங்கானை – மல்லாகம் சந்தியில் திறந்து வைக்கப்பட்டது.
சங்கானை பேருந்து நிலையத்தில் இருந்து விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு வங்கியை திறந்து வைத்த பின்னர் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது விருந்தினர்களின் உரையை தொடர்ந்து, உத்தியோக பூர்வமாக வங்கிச் சேவைகள் ஆரம்பிக்கும் முகமாக கடன் வழங்கல், வைப்புக்களை ஏற்றல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
பின்னர் கல்வியில் சிறந்த மாணவர்கள், நீண்டகால வாடிக்கையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் திரு. சிவாஞ்சன் அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், யாழ். இலங்கை வங்கி முகாமையாளர், யாழில் உள்ள ஏனைய இலங்கை வங்கிகளின் முகாமையாளர்கள், வாசுதேவ குருக்கள், சங்கானை பிரதேச செயலாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், மானிப்பாய் பொலிஸ் உதவிப் பொறுப்பதிகாரி, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

