
பொண்டுகள்சேனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய நிலையிலுள்ள பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் இன்று வியாழக்கிழமை ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இடம் பெற்றது.
மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாக அறப்பணி சபையின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் இச் செயற்பாடு இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கான அனுசரணையினை மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கனடாவில் வசித்து வரும் ஞானப்பிரகாசம் பிரகாந்தன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில், பாடசாலை அதிபரும், ஆனந்தகிரி அறப்பணி சபையின் கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளருமான ச.வசத்தகுமார், பிரதி அதிபர் த.பஞ்சாட்சரம், அறப்பணி சபையின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான ச.சிவலிங்கம், கிராம உத்தியோகத்தர் K.குரு என பலரும் கலந்து கொண்டனர்.

